சமாதானத் திட்டம்
சமாதானத் திட்டம்
வணிகர்களின் வரி நிலுவையை எளிய முறையில் வசூலிக்கும் திட்டம் சமாதானத் திட்டமாகும்.
தொடக்கம்
16 அக்டோபர் 2023, தமிழகம் முழுவதும்.
திட்ட பின்னனி
- தமிழ்நாட்டில் மதிப்புக் கூட்டு வரிச் சட்டம் 2006 – அறிமுகம்
- மேலும் விற்பனை வரி சார்ந்த 10 சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
முக்கிய நோக்கம்
- வணிகர்களிடமிருந்து வரி நிலுவையை, எளிதாக வசூலிக்கும் வகையில் 1999இல் சமாதானத் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது.
- இத்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 2002, 2006, 2008, 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வணிகர்களின் நீண்டகால வரி நிலுவைகள் குறைக்கப்பட்டன.
ஐந்து வகை வணிகர்கள்
வரி நிலுவைகளை வைத்திருக்கும் வணிகர்கள், ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.
- வரி விதிப்பு ஆண்டில் ரூ. 50,000/- குறைவான வரி, வட்டி, அபாரதத் தொகை உள்ளவர்கள்,
- ரூ. 50,000/- முதல் ரூ.10 லட்சம் வரை
- ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை
- ரூ.1 கோடி முதல் ரூ. 10 கோடி வரை
- ரூ.10 கோடிக்கு மேலாக உள்ளவர்கள் என
நிலுவை வைத்துள்ள வணிகர்கள் வகைப்பாடு செய்யப்பட்டுள்ளனர்.
தள்ளுபடி
ரூ. 50,000/- குறைவாக நிலுவை உள்ள வணிகர்களின் நிலுவை தொகை முழுமையாக ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.
Leave a Reply