டால்பின் திட்டம்
Source : TN Press Release
டால்பின் பாதுகாப்பு திட்டம் : 06.11.2023 அன்று, ரூ.8.13 கோடி செலவில் ‘டால்பின் திட்டம்’ செயல்படுத்தப்படும் என்று தமிழக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டால்பின் திட்டம்
திட்டம்
நீர்வாழ் வாழ்விடங்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக ஒரு விரிவான செயல் திட்டம்.
நிதி
இத்திட்டம் 8.13 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்.
துறை
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை.
முக்கிய நோக்கம்
மீனவர்கள் மற்றும் கடல் சார்ந்த பிற மக்களுடன் இணைந்து, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, டால்பின்கள் மற்றும் அவற்றின் நீர்வாழ் வாழ்விடங்களை பாதுகாப்பது ஆகும்.
தமிழகத்தில் காணப்படும் வகைகள்
தமிழகத்தில் கடல்வாழ் உயிரினங்களில், 9-க்கும் மேற்பட்ட டால்பின் வகைகள் காணப்படுகின்றன.
முக்கிய வாழ்விடங்கள்
- மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தில், டால்பின்களின் முக்கிய வாழ்விடங்களாக உள்ளன.
- சுற்றுச்சூழலை சமநிலையில் வைத்திருப்பதில் டால்பின்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
- கடந்த ஆண்டு மன்னார் வளைகுடா பகுதியில், ஏழு டால்பின்கள் மீட்கப்பட்டு, கடலில் விடப்பட்டன.
- மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தில், கடல் பாலூட்டிகளான கடல் பசு போன்றவை உட்பட வளமான கடல் பல்லுயிர் பெருக்கத்துடன் அதிக உற்பத்தித் திறன் கொண்ட பகுதியாகும்.
இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ள நடவடிக்கைகள்
- பாதுகாப்பை வலுப்படுத்துதல்.
- சிறந்த ரோந்து வேட்டை தடுப்பு நடவடிக்கைகள் மூலமாக, பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல்.
- கண்காணித்தில்
- நவீன உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்துடன் கண்காணிப்பு மற்றும் ரோந்து குழுக்களை வலுப்படுத்துதல்
- கால்நடை மருத்துவ சேவைகளை வலுப்படுத்துதல்,
- மீட்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள்
- டால்பின் வாழ்விடத்தை மேம்படுத்துதல்
- அலையாத்தி காடுகள், பவளப்பாறைகள், கடல் புல் போன்ற கடலோர சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுப்பதன் வழியே, டால்பின் வாழ்விடத்தை மேம்படுத்துதல்.
- சுருக்குமடி வலைகளை அகற்றுதல் மற்றும்
- கடலோரப் பகுதிகளில் மாசுபாட்டை குறைத்தல்
- விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
- உள்ளூர் மக்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஒத்துழைப்புடன்,
- ‘டால்பின் உதவித்தொகை‘ துவக்குதல் உட்பட
- தேசிய டால்பின் தினத்தை கொண்டாடுவதன் வழியே விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
- கலந்தாய்வுக் கூட்டங்கள், கருத்தரங்குகள், கூட்டங்கள் போன்றவை மூலம் மேற்படி அழிந்து வரும் உயிரினங்களை சிறப்பாக கற்கவும் புரிந்து கொள்ளவும், ஏற்பாடு செய்தல்.
- டால்பின் இனங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல்.
Leave a Reply