முன்னுரை தமிழ் நிலமானது மிகத் தொன்மை வாய்ந்தது. தமிழின் தொன்மையும், தமிழரின் பண்பாட்டையும், அறிவியல் பூர்வமாக நிறுவ வேண்டும் என்றால் முறையான அகழ்வாய்வுகள் அவசியமாகும். ஆய்வு அறிவிப்பு - 20.01.2022 ஆய்வுக்கான ஏழு இடங்கள் பண்டைய தமிழ்ச் சமூகத்தின் தொன்மை, பண்பாடு மற்றும் விழுமியங்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் 1. கீழடி (கொந்தகை, அகரம் மணலூர்), சிவகங்கை மாவட்டம்- எட்டாம் கட்டம் 2. சிவகளை, தூத்துக்குடி மாவட்டம் - மூன்றாம் கட்டம் 3. கங்கைகொண்ட சோழபுரம், அரியலூர் மாவட்டம் - இரண்டாம் கட்டம் 4. மயிலாடும்பாறை, கிருஷ்ணகிரி மாவட்டம் - இரண்டாம் கட்டம் 5. வெம்பக்கோட்டை, விருதுநகர் மாவட்டம் - முதல் கட்டம் 6. துலுக்கர்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் - முதல் கட்டம் 7. பெரும்பாலை, தர்மபுரி மாவட்டம் - முதல் கட்டம் 1. கீழடி நோக்கம் 1. இதுவரை கண்டெடுக்கப்பட்ட செங்கல் கட்டுமானங்களின் தொடர்ச்சி மேற்பட்ட சமூக மக்கள் வாழ்ந்ததற்கான சான்று 2. அரிய தொல்பொருட்கள் 3. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுகளுடன் கொண்டிருந்த வணிக தொடர்பு கொண்டதற்கான கூடுதல் சான்றுகளை தேடும் 4. நகர நாகரிக கூறுகளை வெளிப்படுத்தும் நோக்கில் 5. எட்டாம் கட்ட ஆய்வு அகழ்வாய்வு நடைபெறும் 2. சிவகளை - மூன்றாம் கட்டம் ஆய்வு தண் பொருநை ஆற்றங்கரையில் (தாமிரபரணி ஆற்றங்கரை) வாழ்ந்த தமிழ் சமூகத்தினரின் பண்பாடு 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டதற்கான சான்றுகளை தேடி அகழ்வாய்வு நடைபெறும். 3. மயிலாடும்பாறை - இரண்டாம் கட்டம் ஆய்வு நோக்கம் புதிய கற்காலம் மனிதர்கள் தங்களது வேளாண்மை நடவடிக்கைகளை தமிழகத்தில் 4000 ஆண்டுகளுக்கு முன்னரே மேற்கொண்டிருந்தனர் என்பதை நிரூபிக்கும் நோக்கத்துடன் இத்தளம் அமையும். 4. கங்கைகொண்ட சோழபுரம் - இரண்டாம் கட்டம் ஆய்வு நோக்கம் முதலாம் இராசேந்திரனின் நகரமைப்பு மற்றும் மண்ணில் புதைந்துள்ள கட்டுமானங்களை வெளிக்கொணர்ந்து அரண்மனையில் வடிவமைப்பினை தெரிந்து கொள்வது நோக்கமாகும். 5. துலுக்கர்பட்டி - முதல் கட்டம் ஆய்வு அமைவிடம் 1. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் இருந்து தென்கிழக்கு 6 கிலோமீட்டர் தொலைவில் நம்பி ஆற்றின் இடது கரையில் துலுக்கர்பட்டி அமைந்துள்ளது. நோக்கம் 1. செறிவுமிக்க தொல்லியல் தளத்தின் உருவாக்கம், குடியேற்ற முறை மற்றும் தொல்பொருட்களின் தன்மை ஆகியவற்றை கண்டறிவது. 2. நம்பி ஆற்றின் கரையில் இரும்புக்கால பண்பாட்டின் வேர்களை தேடுவது. 6. வெம்பக்கோட்டை - முதல் கட்டம் ஆய்வு அமைவிடம் 1. விருதுநகர் மாவட்டம், சிவகாசியிலிருந்து தெற்கே 15 கிலோமீட்டர் தொலைவில் வைப்பாறு ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது. 2. மேடு என்றும் உச்சிமேடு என்றும் அழைக்கப்படும். 3. பரப்பளவு 25 ஏக்கர் நோக்கம் 1. நுண் கற்காலம் முதல் இடைக்காலம் வரை தொடர்ந்து வந்ததற்கான அடையாளங்களை வெளிப்படுத்துகின்றன. 2. காலவரிசையாக தொடர்ச்சியாக நிலவிய நிலவியல் உருவாக்கத்தின் பின்னணியில் அதிக எண்ணிக்கையிலான நுண்கருவிகளை சேகரிப்பது ஆகும். 7. பெரும்பாலை - முதல் கட்டம் ஆய்வு அமைவிடம் 1. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் மேலச்சேரி சாலையில் பென்னாகரத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் பாலாற்றின் இடது கரையில் அமைந்துள்ளது. 2. கொங்கு நாட்டின் வட எல்லையாகவும் கருதப்படுகிறது. நோக்கம் பாலாற்றின் ஆற்றங்கரையில் இரும்பு கால பண்பாட்டின் வேர்களை தேடுவது. முடிவுரை தமிழகத்தின் தொன்மை வரலாற்றை தொகுத்து எழுதுவதற்கு அதிக அளவிலான சான்றுகள் தேவை. எழுதும் வரலாறு ஆனது அறிவியல் அடிப்படையில் ஆன சான்றுகளைக் கொண்டிருத்தல் வேண்டும். வரலாற்றினை பூர்த்தி செய்து எழுதுவதற்கு அகழ்வாய்வுகள் செய்வது அவசியமாகும். Note : Please drop your comments and feedback for further correction. Source:தமிழரசு
Top 10 Daily Vocabulary Words – Bank Exams
Leave a Reply