நீலகிரி வரையாடு திட்டம் | Project Nilgiri Tahr
தொடக்கம் : நீலகிரி வரையாடு திட்டம்
12, அக்டோபர் 2023, தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி மலை ஆடுகளை பாதுகாக்க, நீலகிரி வரையாடு திட்டம் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 7–ம் தேதியை ‘வரையாடு தினம்’ என அனுசரித்தல்
திட்டதின் காலம்
5 ஆண்டுகள் – 2022 – 2027
முக்கிய நோக்கங்கள்
- நீலகிரி வரையாடு குறித்த எண்ணிக்கை (ரேடியோ காலரிங் மற்றும் ரேடியோ டெலிமெட்ரி முறை மூலம் ஆண்டுக்கு இருமுறை ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு),
- வினியோகம் மற்றும் சூழலியல் குறித்த சிறந்த புரிதலை உருவாக்குதல்;
- வரையாட்டின் வரலாற்று வாழ்விடங்களை மீண்டும் அறிமுகப்படுத்துதல்;
- வரையாடுகளின் அச்சுறுத்தலை நிவர்த்தி செய்தல்.
- வரையாடு இனங்கள் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல்;
- பள்ளி மாணவர்களுக்கு நீலகிரி வரையாடு குறித்த பாடங்களை உருவாக்குதல்.
- நீலகிரி வரையாடு உள்ள இடங்களில் சுற்றுலா நடவடிக்கைகளை உருவாக்குதல்,
- நோய்களைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட வரையாட்டுக்கு சிகிச்சை அளித்தல்
இத்திட்டதின் செயல்பாடுகள்
- 25 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட உள்ளது.
- திட்ட அலுவலகம், கோவையில் அமைக்கப்பட்டு உள்ளது.
- 3,122 வரையாடுகள் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இத்திட்டதின் அமைப்பு
- திட்ட இயக்குனர் நடவடிக்கைகளை மேற்கொள்ள,
- நான்கு முதுநிலை ஆராய்ச்சியாளர்களும்,
- ஒரு மூத்த விஞ்ஞானியும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
Leave a Reply