புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027

நோக்கம் : புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027
15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாத அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு, வாழ்வியல் திறன், ஆகியவற்றை வழங்குவது.
இலக்கு.
2030 ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக உருவாக்குவது.
திட்ட காலம் (ம) நிதி பங்கீடு
ஐந்தாண்டுத் திட்டமாக 60:40 என்ற விகிதத்தில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் நிதிப்பங்களிப்போடு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திட்ட நடைமுறை
- 38 மாவட்டங்களிலும் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாத அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு, வாழ்வியல் திறன், ஆகியவற்றை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
- முதற்கட்டமாக 2022-23 ஆம் ஆண்டில் 5,28,000 கற்போருக்கு இத்திட்டத்தின் வாயிலாக 28,848 மையங்களில் 28848 தன்னார்வலர்கள் மூலம் அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு, வாழ்வியல் திறன் வழங்கப்பட்டுவருகிறது.
குறிக்கோள்கள்
- எழுத்தறிவு பெறாத வயது வந்த அனைவருக்கும் தரமான அடிப்படைக் கல்வி அளித்தல்.
- புதிதாக எழுத்தறிவு பெற்றவர்கள் அடிப்படைக் கல்விக்கு மேல் கற்றலைத் தொடரவும்,
- பள்ளிகளில் அளிக்கப்படும் முறையான கல்விக்கு இணையான கல்வி பெறவும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தல்.
- தொழில் சார்ந்த பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்களின் வருவாய் திறனை மேம்படச் செய்தல்
- புதிதாக எழுத்தறிவு பெற்றோர் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருதல்.
Leave a Reply