போதை இல்லா தமிழகம் | Drug free Tamil Nadu
போதை இல்லா தமிழகம் : நோக்கம்
சமீப காலத்தில் தமிழகத்தில் போதை பொருட்களான கஞ்சா, குட்கா மற்றும் பான் மசாலா போன்றவற்றின்
1. விற்பனை அதிகரித்திருப்பது,
2. பயன்படுத்துவோரில் இளைய சமுதாயத்தினரின் எண்ணிக்கை அதிகரிப்பை தடுக்கும் நோக்கில்
3. தமிழக முதல்வர் அவர்களின் நடவடிக்கை “போதை இல்லா தமிழகம்” ஆகும்.
போதைப்பொருள் எதிர்ப்பு தினம்
1987 டிசம்பர் 7ஆம் தேதி ஐநா பொதுச் சபை அறிவிப்பின்படி, ஆண்டுதோறும் ஜூன் 26 ஆம் தேதி போதைப்பொருள் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
போதை பொருளுக்கு எதிரான நடவடிக்கைகள்
1. போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு DSP பதவி உருவாக்கப்படும்.
2. இப்பிரிவி வலுப்படுத்தப்பட்டு
போதை பொருட்களை விற்பனை செய்வோர் கைது மற்றும் சட்ட நடை நடவடிக்கைகளுடன் அவர்களின் சொத்துக்களும் முடக்கப்படும்.
3. சைபர் செல்(Cyber Cell)
போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவில் Whatsapp, Telegram போன்ற சமூக ஊடங்களில் தனி குழுக்களை ஏற்படுத்தி செய்யப்படும் விற்பனைகளை தடுப்பது சைபர் செல்லின் முக்கிய குறிக்கோளாகும்.
4. போதை பொருட்கள் தடுப்பு மாநாடுகள்
5. பள்ளி கல்லூரிகளில் மாணவர்களிடம் விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி
6. கடத்தல் மற்றும் பதுக்கு தலை தடுப்பது.
அபராதம்
அரசு புள்ளி விவரப்படி குட்கா மற்றும் பான் மசாலா விற்பனையில் சிறுவயபாரிகளின் மீது கடந்த 10 ஆண்டுகளில் சுமார் ரூபாய் மூன்று கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளன.
போதை பொருட்களால் ஏற்படும் தீமையான விளைவுகள்
1. சமூக குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புகள்.
2. இளம் குற்றவாளிகளின் உருவாக அதிக வாய்ப்புகள்
3. உடல் மற்றும் மனம் ரீதியான கோளாறுகள்
4. சாலை விபத்துக்கள் அதிகரிக்கும்
5. பொருளாதார பிந்தங்கிய நிலை மற்றும் வறுமை நிலை.
6. குடும்ப வன்முறை மற்றும் குடும்ப உறவுகள் முறியும் நிலை.
7. தவறான வழியில் பணம் ஈட்டும் எண்ணம்
இடனுடன் தொடர்புடைய தலைப்பு : மதுவுக்கு அடிமையாதலுக்கான காரணங்கள் மற்றும் அவை உடல் நலத்தில் ஏற்படுத்தும் விளைவுகள்
நன்றி : இந்து தமிழ் மற்றும் பள்ளிப் புத்தகம்.
Leave a Reply