மகிழ் முற்றம் திட்டம் 2024

மாணவர்களிடையே தலைமைப் பண்பு மற்றும் ஆளுமைத் திறன் மேம்பட “மகிழ் முற்றம்” எனும் மாணவர் குழுக்கள் நடைமுறைப்படுத்த திட்டம்.

மகிழ் முற்றம்
Photo : X page of Tamil Nadu School Education Department

மகிழ் முற்றம் திட்டம்

  1. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே தலைமைப் பண்பை வளர்க்கும் வகையில் மாணவர் குழு அமைப்புமகிழ் முற்றம்’ என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
  2. நிதி மதிப்பீடு :
    • இந்தத் திட்டம் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது.

முதன்மை நோக்கம்

  1. குழுவாக இணைந்து செயல்படுதல்,
  2. சமூக மனப்பான்மை,
  3. வேற்றுமைகள் இல்லாத பரஸ்பர ஆதரவு

திட்ட செயல்முறை

  1. பள்ளியில் உள்ள அனைத்து மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் குறிஞ்சி, முல்லை உள்ளிட்ட 5 குழுக்களாகப் பிரிக்கப்படுவா்.
  2. இந்தக் குழுவில் 1 முதல் +2 வரை உள்ள அனைத்து மாணவா்களும் இடம்பெறுவா்.
  3. ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் மாணவா்கள் இந்த 5 குழுக்களில் இடம் பெறும் வகையில் பிரிக்கப்பட்டு, அவா்களுக்கான குழு EMIS தளத்தின் மூலமாக ஒதுக்கீடு செய்யப்படும்.

பதவி ஏற்பு விழா

  1. நவ.14-ஆம் தேதிக்குள் ஒவ்வொரு குழுவுக்கான
    • மாணவா் தலைவா்கள்,
    • வகுப்பு தலைவா்கள்,
    • தலைமை பொறுப்பு ஆசிரியா்,
    • குழுவுக்கான பொறுப்பு ஆசிரியா்கள் ஆகியோருக்கான பதவி ஏற்பு விழா அனைத்து பள்ளிகளிலும் நடைபெறுவதை தலைமை ஆசிரியா்கள் உறுதி செய்ய வேண்டும்.
  2. அந்த நிகழ்வை புகைப்படங்கள், காணொலியாக EMIS தளத்தில் நவ.19-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
More Read…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
NEET PG 2025 Exam Dates NLC INDIA RECRUITMENT 2024 10 POWERFUL BOOKS : EVERY STUDENT SHOULD READ Top 10 Daily Vocabulary Words – Bank Exams Top 5 Universities to studying Robotics : Course and Apps to Learn It