வள்ளலாரின் 200வது பிறந்த நாளை முன்னிட்டு, ரூ.20 கோடியில் ஆதரவில்லாத, கைவிடப்பட்ட, காயமடைந்த வளர்ப்பு பிராணிகள் பாதுகாக்கும் “வள்ளலார் பல்லுயிர் காப்பகம் திட்டம்” முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
அறிமுகம்:
‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று பல்லுயிர் ஓம்பிய வள்ளலார் 200-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, ரூ.20 கோடியில் ஆதரவற்ற விலங்குகளை பாதுகாக்கும் ‘வள்ளலார் பல்லுயிர் காப்பகம் திட்டம்’ சென்னை வள்ளுவர் கட்டத்தில் 16.01.2023 அன்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
திட்டம் மற்றும் நோக்கம்
- ஆதரவற்ற, கைவிடப்பட்ட, காயமடைந்த வளர்ப்பு பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளை பராமரிக்கும் அரசுசாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு உதவி அளிக்க ‘வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டம்’ எனும் புதிய திட்டம் தொடங்கப்படும்.
நிதி பங்கீடு
இத்திட்டத்துக்கு ரூ.20 கோடி ஒதுக்கப்படும் என்று இந்த நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
அமைச்சகம்
கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம், மீனவர் நலத்துறை சார்பில் ‘வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டம்’ தொடக்கப்பட்டது.
செயல்முறை
தொண்டுநிறுவனங்கள் மற்றும் முதல் தவணை
- நீலகிரியை சேர்ந்த இந்தியா புராஜக்ட் ஃபார் அனிமல் ஃபண்டு நேச்சர்,
- சென்னையை சேர்ந்த அனிமல் கேர் டிரஸ்ட், மெட்ராஸ் அனிமல் ரெஸ்க்யூ சோசைட்டி, பிருத்வி
அனிமல் வெல்ஃபேர் சோசைட் டி, பைரவா ஃபவுண்டே ஷன் ஆகிய தொண்டு நிறுவனங்களுக்கு - மொத்தம் ரூ.2.14 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
- முதல் தவணையாக ரூ.88 லட்சத்துக்கான காசோலைகளை இந்த நிறுவனங்களிடம் முதல்வர் வழங்கினார்.
இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்
- விலங்குகளுக்கு உணவு, மருத்துவ வசதி வழங்கவும், உறைவிடம்,
- விலங்குகளுக்காக மருத்துவ அவசர சிகிச்சை ஊர்தி வாங்குவது,
- ஆதரவற்ற, கை விடப்பட்ட, காயமடைந்து தெருவில் சுற்றி திரியும் விலங்குகளுக்கு உறைவிடம் கட்டுவது,
- தெருநாய் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கருத்தடை அறுவை சிகிச்சை ,
- வெறிநாய் தடுப்பூசி போடுவது ஆகிய பணிகளுக்கு இந்த நிதி செலவிடப்படும்.
Leave a Reply