தேசிய கொடி சட்டம் 2022 இன் சிறப்புகள் | Features of National Flag Act 2022
முன்னுரை
இந்திய மக்களின் விசுவாச சின்னமாகவும் ஆன்மாவோடு கலந்துள்ள நமது தேசியக் கொடியை ஏற்கவும் பயன்படுத்தவும் தேசிய மரியாதை அவமதிப்பு சட்டம் 1971 மற்றும் தேசிய கொடி சட்டம் 2002 மூலம் நிர்வாகிக்கப்படுகிறது.
நோக்கம்
- தேசியக் கொடியை பயன்படுத்தும் நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலை வழங்குவது.
தேசியக்கொடி சட்டத்தின் மூன்று பகுதிகள்
- பகுதி I – பொதுவான விளக்கம்.
- பகுதி II – பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தேசியக் கொடியை பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்.
- பகுதி III – மத்திய மாநில அரசுகளுக்கான நெறிமுறைகள்.
தேசியக்கொடி சட்டம் 2002 இன் சிறப்பம்சங்கள்
சட்ட திருத்தம்
- 30 டிசம்பர் 2021 அன்று தேசியக் கொடிச் சட்டம் 2002 திருத்தப்பட்டது.
- பாலிஸ்டர் மற்றும் இயந்திரத்தால் ஆன கொடிகள் பயன்படுத்த அனுமதி அல்லது இயந்திரத்தால் செய்யப்பட்ட, பருத்தி, பட்டு, காதி பந்தல் ஆகியவற்றால் உருவாக்கப் பட்டிருக்க வேண்டும்.
தேசியக் கொடியின் வடிவம் மற்றும் அளவு
- செவ்வக வடிவில் இருக்க வேண்டும்.
- எந்த அளவில் இருந்தாலும் அதன் அகலம் மற்றும் நீளத்திற்கு ஏற்ப விகிதம் 3:2 இருக்க வேண்டும்.
மற்றவை
- வானிலையை பொருட்படுத்தாமல் சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை தேசிய கொடியை திறந்த வெளியில் பறக்க விடலாம்.
- இரவிலும் பறக்க விடலாம்.
- கொடிச் சட்டத்தின் பகுதி III பிரிவு 9ன் படி, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், ஆளுநர்கள் போன்ற முக்கிய தலைவர்கள் வாகனத்தில் மட்டுமே கொடி பறக்க விட வேண்டும்.
- தேசியக் கொடியை அருகில் வேறு கொடியையோ அல்லது உயரமாகவோ பறக்க விடக்கூடாது.
Leave a Reply