6th to 10th Tamil – மேற்கோள்கள்

6th to 10th Tamil – மேற்கோள்கள் (TNPSC TAMIL)

மேற்கோள்கள்கூறியவர் (அல்லது)
இடம்பெற்றுள்ள நூல்
“சாகும்போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும்!
என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்!”
க. சச்சிதானந்தன்
“உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்” தண்டி
1. தண்டி – பல்லவர் ஆட்சிக் காலத்தில் காஞ்சியில் வாழ்ந்த புலவர்.
2. இவர் வடமொழியில் ‘தண்டியலங்காரம்’ என்னும் நூலை இயற்றினார்.
3. இந்த நூலைத் தழுவித் தமிழில் தண்டியலங்காரம் என்னும் நூல் தோன்றியது.
4. தண்டியலங்காரம் – ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
“களம்புகத் துடித்து நின்ற உனக்கு, வெற்றிச்சாறு கிடைத்து விட்டது, உண்டு மகிழ்ந்தாய்; உன் புன்னகைதான் அதற்குச் சான்று” – என்று கூறியவர்?அறிஞர் அண்ணா
“இந்தியா தான் என்னுடைய மோட்சம்: இந்தியாவின் நன்மை தான் என் நன்மை” என்று கூறியவர்?மகாகவி பாரதியார்
“குடிசைகள் ஒரு பக்கம், கோபுரங்கள் மறுபக்கம்”ப. ஜீவானந்தம்
வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் – என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?சிலப்பதிகாரம்
வாயு வழக்கம் அறிந்து செரிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம் – என்ற பாடலை பாடியவர்?ஒளவையார்
வளி மிகின் வலி இல்லை – என்றாவர்?​ஐயூர் முடவனார் / புறநானூறு
தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை – என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?சிலப்பதிகாரம்
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே? – என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?
கம்பராமாயணம்
“விருந்தினரும் வறியவரு நெருங்கி யுண்ண மேன்மேலு முகம்மலரு மேலோர் போல” – என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?கலிங்கத்து பரணி
“உண்டால் அம்ம, இவ்வுலகம்! இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே……” என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?
புறநானூறு
குரல் உனக்கு விதைத் தினை உரல்வாய்ப் பெய்து சிறிது புறப்பட்டடன்றோ இயள் – என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?புறநானூறு
அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் – என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?நற்றிணை
நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன்
இரும்புடைப் பழவாள் வைத்தனன்; இன்று இக்
கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்; – என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?
புறநானூறு
“பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீ ரோ” – என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?குறுந்தொகை
காலின் ஏழடிப் பின் சென்று – என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?பொருநராற்றுப்படை
“ கடும் பகட்டு யானை. நெடுந்தேர்க் கோதை திரு மா வியல் நகர்க் கருவூர் முன்துறை” – என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?அகநானூறு
“கறங்கு இசை விழவின் உறந்தை …” – என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?அகநானூறு
“ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு ” என்கிறார் ? மணவை முஸ்தபா
ஒரு மொழி வளம் பெறவும் உலகத்துடன் உறவு கொள்ளவும் மொழிபெயர்ப்பு இன்றியமையாததாகும் உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும்’ என்கிறார்.மு.கு. ஜகந்நாதர்
“காசினியில் இன்று வரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணி பேசி மகிழ் நிலை வேண்டும்” என கூறியவர்?
குலோத்துங்கன்
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் – என கூறியவர்?மகாகவி பாரதியார்
எறியார் எறிதல் யாவனது? எறிந்தோர்
எதிர்சென்று எறிதலும் செல்லான் – என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?
புறம்
‘இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்’ எனும்
அறவிலை வணிகன் ஆ அய் அல்லன்” என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?
புறம்
செல்வது பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே – என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?
புறம்
பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி,
அறன் அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன்
கலித்தொகை
சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே –
நற்றிணை
“பிழையா நன்மொழி” என்று வாய்மையை குறிப்பிடும் நூல்நற்றிணை
“இனிமையும் நீர்மையும் தமிழென லாகும்”பிங்கல நிகண்டு
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்”பாரதியார்
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்இளங்கோவடிகள்
நீரின்று அமையாது உலகம்திருவள்ளுவர்
மழை உழவுக்கு உதவுகிறது.
விதைத்த விதை ஆயிரமாகப் பெருகுகிறது.
நிலமும் மரமும் உயர்கள் நோயின்றி வாழவேண்டும் என்னும் நோக்கில் வளர்கின்றன. – என்று கூறியவர்
மாங்குடி மருதனார்
உணவெனப்படுவது நிலத்தொடு நீரேபுறநானூறு
குள்ளக் குளிரக் குடைந்து நீராடி ஆண்டாள்
நீரும் நீராடலும் வாழ்வியலோடு பின்னிப் பிணைக்கப்பட்டவையாக விளங்குக்கின்றன – என்று கூறிய பேராசிரியர்தொ. பரமசிவம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே !புறநானூறு
உண்பது நாழி உடுப்பவை இரண்டே !புறநானூறு
யாதும் ஊரே யாவரும் கேளிர் !புறநானூறு
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே !
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே !
புறநானூறு
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்,
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே !
புறநானூறு
அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இது கேள்! – மன்னுபார்க் கெல்லாம் உண்டியும், உடையும், உறையுளும் அல்லது கண்டது இல்.மணிமேகலை
“மகத நன்நாட்டு வாள்வாய் வேந்தன், பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபம்”சிலப்பதிகாரம்
(காதை 5, அடி 102)
பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின்மணிமேகலை
(காதை 1, அடி 16)
பட்டிமண்டபம் ஏற்றினை ஏற்றினை: எட்டினோடு இரண்ம் அறியேனையே..திருவாசகம் (சதகம் 41)
பன்ன அரும் கலைதெரி பட்டிமண்டபம் கம்பராமாயணம் (பாலகாண்டம், நகரப்படலம் 154)
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்திபுறநானூறு
அந்தரத் தார்மய னேயென ஐயுறும்
தந்திரத்தால் தம நூல்கரை கண்டவன்
வெந்திற லான், பெருந் தச்சனைக் கூவி, ஓர்
எந்திர வூர்திஇ யற்றுமின்” என்றான்
சீவக சிந்தாமணி
முடியாது பெண்ணாலே என்கிறார்
மாயையினை முடக்க எழுந்தவர்..
– பெரியார்
விடியாது பெண்ணாலே என்கின்ற கேலியினை மிதித்துத் துவைத்தவர் – பாரதியார்
பெண்ணடிமை தீரும்வரை மண்ணடிமை தீருமோவென இடிமுழக்கம் செய்தய்தவர்.பாரதிதாசனார்
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
பாரதியார்
மங்கையராய்ப் பிறப்ப தற்கே நல்ல மாதவம்
செய்திடல் வேண்டுமம்மா ….
– கவிமணி
பெண்எனில் பேதை என்ற எண்ணம்
இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும்
உருப்படல் என்பன்பது சரிப்படாது
– பாவேந்தர்
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு.
கத்தியைத் தீட்டாதே உன்றன் புத்தியைத் தீட்டு.
வன்முறை இருபக்கமும் கூர் உள்ள கத்தி ஆகும்.
எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.
பேரறிஞர் அண்ணா
சட்டம் ஒரு இருட்டறை – அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு.பேரறிஞர் அண்ணா
மக்களின் மதியைக்கெடுக்கும் ஏடுகள் நமக்குத் தேவையில்லை;
தமிழரைத் தட்டி எழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை;
தன்னம்பிக்கை ஊட்டி மதிப்பைப் பெருக்கும் நூல்கள் தேவை;
பேரறிஞர் அண்ணா
நல்ல வரலாறுகளைப் படித்தால்தான்
இளம் உள்ளத்திலே புது முறுக்கு ஏற்படும்.
பேரறிஞர் அண்ணா
இளைஞர்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை.பேரறிஞர் அண்ணா
இளைஞர்கள் உரிமைப் போர்ப்படயின் ஈட்டி முனைகள்.பேரறிஞர் அண்ணா
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்;
இனி நடப்பவவை நல்லவையாக இருக்கட்டும்.
பேரறிஞர் அண்ணா
வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்குத் தரப்பட வேண்டும் – அறிஞர் அண்ணா
உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே ! – கதே
“இராவண காவியம், காலத்தின் விளைவு.
ஆராய்ச்சியின் அறிகுறி. புரட்சிப் பொறி.
உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்”
பேரறிஞர் அண்ணா
விடுதலையினால் உண்டாகும் மகிழ்ச்சியும் சுதந்திரத்தினால் உண்டாகும் மனநிறைவும் வேண்டுமா?
அப்படியானால் அதற்கு விலையுண்டு. அவற்றுக்கான விலை துன்பமும் தியாகமும் தான்.
நேதாஜி
“பொறிமயிர் வாரணம் …
கூட்டுறை வயமாப் புலியொடு குழும”
மதுரைக்காஞ்சி
(673 – 677 அடிகள்)
இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும்
அறவிலை வணிகன் ஆய் அல்ன்
புறநானூறு
படுதிரை வையம் பாத்திய பண்பே – தொல்காப்பியம்
கண்ணெழுத்துப் படுத்த என்னும் பல்பொதி – சிலப்பதிகாரம்
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே – தொல்காப்பியம்
இமயத்துக்
கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டுத்
தீது இல் யாக்கையோடு மாய்தல் தவத்தலையே.
புறநானூறு
இமயத் தீண்டி இன்குரல் பயிற்றிக்
கொண்டல் மாமழை பொழிந்த
நுண்பல் துளியினும் வாழிய பலவே ”.
புறநானூறு
நெட்டெழுத்து ஏழே ஓர் எழுத்து ஒருமொழி என்பார்தொல்காப்பியர்
வேர் பாரு, தழை பாறு மிஞ்சினக்கால் பற்ப செந்தூரம் பாரே என்றனர் – சித்தர்கள்
கல்வி கரையில் கற்பவர் நாள் சில – நாலடியார்
கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு – ஆலங்குடி சோமு
இளமையில் கல் முதுமொழி
தண்டுடுக்கை தாளந்தக்கை. சார நடம்பயில்வார் –சம்பந்தர் தேவாரம்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்திருப்பாவை
நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான் பாடினி அணியாள்புறநானூறு
சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி வெங்குரல் பம்பை கண்டை வியன்துடி திமிலை தட்டிபெரியபுராணம்
“மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத முத்துடைத் தாமநி ரைதாழ்ந்த பந்தற்கீழ்”நாச்சியார் திருமொழி
கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம் சிலைகெழு குறவர்க்குபுறநானூறு
வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு– தொல்காப்பியம்
போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும்?– தொல்காப்பியம்
நெல்லும் உப்பும் நேரே, ஊரீர் கொள்ளிரோ வெனச் சேரிதொறும் நுவலும்அகநானூறு
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் நின்னகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே!ஒளவையார்
உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்.அகநானூறு
அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கம்பதிற்றுப்பத்து
நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருகபுறநானூறு
கலம் தந்த பொற் பரிசம் கழித் தோணியான், கரை சேர்க்குந்துபுறநானூறு
திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலிதிருஞானசம்பந்தர்
தண்பொருநைப் புனல் நாடுசேக்கிழார்
பொதியி லாயினும் இமய மாயினும் பதியெழு வறியாப் பழங்குடி கெழீஇய பொதுவறுஇளங்கோவடிகள்
நுண் துளி தூங்கும் குற்றாலம் திருஞானசம்பந்தர்
இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம். துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும்பரிபாடல்
புனையா ஓவியம் கடுப்பப் புனைவில் – நெடுநெல்வாடை
புனையா ஓவியம் புறம் போந்தன்ன – மணிமேகலை
எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உளவாகும்நன்னூல்
“கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஇய்” – மணிமேகலை
“திங்கள் நாள்விழா மல்கு திருநெல் வேலியுறை செல்வர் தாமே”திருஞானசம்பந்தர்
முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறைநற்றிணை
கொற்கையில் பெருந்துறை முத்து அகநானூறு
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் !
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும் !
திரிகூட இராசப்பக் கவிராயர்
தமிழென் கிளவியும் அதனோ ரற்றே– தொல்காப்பியம்
“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இது நீ கருதினை ஆயின்”– சிலப்பதிகாரம் / வஞ்சிக்காண்டம்
தமிழன் கண்டாய் அப்பர் தேவாரம்
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்பாரதியார்
“என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்” என்று தமிழ்த்தாயின் தொன்மையை வியந்து பாராட்டியவர்பாரதியார்
தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும்கபிலர் / திருவள்ளுவமாலை
நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்– தொல்காப்பியம்
கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலிகார்நாற்பது
நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடுபதிற்றுப்பத்து
கோட் சுறா எறிந்தென சுருங்கிய
நரம்பின் முடிமுதிர் பரதவர்
நற்றிணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Top 10 Daily Vocabulary Words – Bank Exams Top 5 Universities to studying Robotics : Course and Apps to Learn It Remote work at Amazon TATA WORK FROM HOME JOBS 2023 World Ocean Day : 2023