Causes of alcohol addiction and their effects on health | மதுவுக்கு அடிமையாதலுக்கான காரணங்கள் மற்றும் அவை உடல் நலத்தில் ஏற்படுத்தும் விளைவுகள்
மதுவுக்கு அடிமையாதலுக்கான காரணம்
மதுவுக்கு அடிமைப்படுத்தும் பண்புள்ள போதையானது, ஒருவரை தீய விளைவுகளுக்கு உட்படுத்தி, அதை நிரந்தரமாகச் சார்ந்திருப்பதற்கான பாதையில் இட்டுச் செல்கிறது.
ஆல்கஹாலிசம்
மதுவின் மீது ஏற்பட்ட உடல் மற்றும் உணர்ச்சி சார்ந்த சார்பு நிலையின் காரணமாக மது குடிப்பதை கட்டுப்படுத்த முடியாத நிலை ஆகும்.
மகிழ்ச்சி உணர்வு (Euphoria)
போதை மருந்து பயன்படுத்துபவர் தொடர்ந்து போதை மருந்தை மட்டுமே நினைக்கிறார். அதன் மீது அவருக்கு தொடர்ச்சியான கட்டுப்படுத்தப்பட முடியாத ஏக்கம் ஏற்படுகிறது. இந்த நிலையே மகிழ்ச்சி உணர்வு எனப்படும்.
ஆல்கஹாலின் தவறான பயன்பாடு
1. சமுதாயத்தில் மக்களால் மேற்கொள்ளப்படும் ஆல்கஹால் பயன்பாடு (நுகர்வு) என்பது ஒரு சமுதாய தீங்கு ஆகும்.
2. ஆல்கஹாலை சார்ந்திருத்தல் மதுப்பழக்கம், மதுவுக்கு அடிமையதால் தவறான பயன்பாடு என்று அழைக்கப்படுகிறது.
3. மது அருந்துதல் ஒருவரின் உடல் மற்றும் உளவியல் செயல்பாடுகளை பாதிப்புக்குள்ளாக்குகிறது.
மதுவினால் உடல் நலத்திற்கு ஏற்படும் தீமையான விளைவுகள்
நீண்டகால பயன்பாட்டினால் மது ஒரு மயக்க மருந்தாகவும் மற்றும் வலி நிவாரணி போன்று செயல்பட்டு, நரம்பு மண்டலத்தை நலிவடைய செய்கிறது.
மதுவின் தீமை பயக்கும் சில விளைவுகள்
- நரம்பு செல்களை பாதித்து மனம் மற்றும் உடல் ரீதியான கோளாறுகளை உண்டாக்குகிகிறது.
- உடல் உறுப்புகளின் ஒருங்கிணைப்பை குறைக்கிறது.
- பார்வை குறைப்பாட்டை ஏற்படுத்துகிறது.
- சாலை விபத்துகள், கொலை செய்யும் எண்ணம் தூண்டும்.
- இரத்த நாளங்களின் விரிவடைதல் இதயத்தின் செயல்பாட்டை பாதிக்கிறது.
- கல்லீரல் சேதத்தினால் அதிக அளவு கொழுப்பு சேர்க்கப்பட்டு சிர்ரோசிஸ் மற்றும் நார்த் திசுக்கள் உருவாதலை ஏற்படுத்துகிறது.
- உடல் தன் கட்டுப்பாட்டையும், தன்னுணர்வினையும் இழந்து உடல்நல கோளாறுகளை உண்டாக்கி இறுதியில் இழப்பை ஏற்படுத்துகிறது.
மது அருந்துபவர்களின் மறுவாழ்விற்கான நடவடிக்கைகள்
1. கல்வி மற்றும் ஆலோசனை
கல்வி (ம) சரியான ஆலோசனைகள் மது அருந்துபவர்களுக்கு தங்கள் பிரச்சனைகலிருந்து விடுபடவும் வாழ்க்கையின் தோல்விகளை ஏற்றுக் கொள்ளவும் உதவும்.
2. உடல் ரீதியான செயல்பாடுகள்
மறுவாழ்வை மேற்கொள்பவர்கள் நூல்கள் வாசித்தல், இசை, பாடல்கள், விளையாட்டு யோகா மற்றும் தியானம் போன்ற நலமான செயல்பாடுகளில் ஈடுபடுத்திக் கொள்ளுதல் வேண்டும்
3. பெற்றோர்மற்றும் சக மனிதர்களிடம் உதவி
பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களின் பெற்றோர்கள் மற்றும் சக மனிதர்கள் மனிதர்களிடம் உதவி மற்றும் வழிகாட்டுதலை பெற வேண்டும்
சிக்கல் நிறைந்த சூழ்நிலை பதட்டமான உணர்வுகள் தவறான செயல்களை குறித்து பேசுவதன் மூலம் அவர்களை தவறு செய்யாமல் தடுத்துக் கொள்ள உதவும்.
4. மருத்துவ உதவி
உளவியலாளர்கள் மற்றும் மனநல மருத்துவர்களிடமிருந்து உதவிகள் மூலம் மதுவில் இருந்து விடுபட்டு, நிம்மதியான மற்றும் அமைதியான வாழ்வை வாழ முடியும்.
5. ஆபத்தான அறிகுறிகளைக் கண்டறிதல்
போதைப் பழக்கத்திற்கு அடிமையாகும் அறிகுறிகளை பெற்றோர்,ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் கண்டறிதல் வேண்டும்.
6. மறுவாழ்வு திட்டங்கள்
மதுவில் இருந்து மீட்பு (De-addiction) மற்றும் மறுவாழ்வு திட்டங்கள் தனிநபருக்கு உதவிகரமாக உள்ளன.
7. தொழில்முறை பயிற்சி
தகுதிக்கு ஏற்ப தொழில்முறை பயிற்சியின் மூலம் அடிமை மீட்சி மற்றும் பல வடிவங்களில் உதவிகள் கிடைக்கின்றன.
இடனுடன் தொடர்புடைய தலைப்பு : போதை இல்லா தமிழகம்……
நன்றி : பள்ளிப் புத்தகம்.
Leave a Reply