Tamil Eligibility Set 1

TNPSC Tamil Eligibility Paper Practice Set 1 (As per School Book)

1. உவமையைப் பயன்படுத்திச் சொற்றொடர் உருவாக்குக.

  1. தாமரை இலை நீர் போல
    Answer:
    என் நண்பன் தாமரை இலைநீர் போலப் பட்டும் படாமலும் பழகுவான்.
  2. மழைமுகம் காணாப் பயிர்போல
    Answer:
    தாயை காணாத குழந்தை மழை முகம் காணாப் பயிர்போல வாடினான்.
  3. கண்ணினைக் காக்கும் இமைபோல
    Answer:
    இறைவன் அனுதினமும் நம்மைக் கண்ணினைக் காக்கும் இமைபோலக் காத்துக் கொண்டு இருக்கிறார்.
  4. சிலை மேல் எழுத்து போல
    Answer:
    சிறுவயதில் கற்கும் அறக்கருத்துகள் சிலைமேல் எழுத்து போல் மனதிலே நிலைத்து நின்று நம் வாழ்வை வழி நடத்தும்.

2. மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக.

  1. மனக்கோட்டை:
    படிக்காமலே தேர்வில் வெற்றிபெற்றுவிடலாம் என்று சில மாணவர்கள் மனக்கோட்டை கட்டுகிறார்கள்.
  2. கண்ணும் கருத்தும்:
    கண்ணும் கருத்தாய் கவனமுடன் படித்தால் முதல் மதிப்பெண் பெறலாம்.
  3. அள்ளி இறைத்தல்:
    பணத்தைக் கணக்குப் பார்க்காமல் அள்ளி இறைத்தால் விரைவில் வறுமைநிலை அடைவாய்.
  4. ஆறப்போடுதல்:
    பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தாது ஆறப்போடுதல் அநேக தீயவிளைவுகளைத் தடுக்கும்.

3. சொற்களைப் பிரித்துப் பொருள் தருக.

  1. கானடை :
    • கான் அடை = காட்டைச் சேர்
      கான நடை = காட்டுக்கு நடத்தல்
      கால் நடை = காலால் நடத்தல்
  2. வருந்தாமரை:
    • வரும் தாமரை – தாமரை மலர்
      வரும் தா மரை – தாவும் மான் வருகிறது.
      வருந்தா மரை – துன்புறாத மான்
  3. பிண்ணாக்கு :
    • பிண்ணாக்கு – எள், கடலை ஆட்டும்போது கிடைப்பது.
      பிள் நாக்கு – பிளவுபட்ட நாக்கு
  4. பலகையொலி :
    • பலகை ஒலி – பலகையால் ஏற்படும் ஒலி
      பல கை ஒலி – பல கைகள் தட்டும் ஒலி.

Tamil Eligibility : Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
NEET PG 2025 Exam Dates NLC INDIA RECRUITMENT 2024 10 POWERFUL BOOKS : EVERY STUDENT SHOULD READ Top 10 Daily Vocabulary Words – Bank Exams Top 5 Universities to studying Robotics : Course and Apps to Learn It