child’s first 1000 days of life : குழந்தைகளையும், தாய்மார்களையும் ஆரோக்கியமாக பாதுகாக்கும் வகையில் குழந்தையின் வாழ்வின் முதல் 1000 நல் நாட்கள் நிதி உதவி திட்டத்தை தமிழகத்திலே முதல் முறையாக தொடங்கப்பட்டது.
குழந்தையின் வாழ்வில் 1,000 நாட்கள் திட்டம் | child’s first 1000 days of life
1. தொடக்கம்
தமிழகத்திலே முதலாவதாக ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கப்பட்டது.
2. திட்ட மதிப்பு
ரூ.38.20 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது.
3. நோக்கம்
- குழந்தையின் வாழ்வில் 1,000 நாட்கள் தமிழ்நாட்டில் தாய் சேய் குறைபாடு உள்ள கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் வகையில் ‘குழந்தையின் வாழ்வின் முதல் 1000 நாட்கள் நிதி உதவி‘ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- அதாவது, கருத்தறித்த நாள் தொடங்கி 2 வயது முடிவடையும் நாள் வரை கணக்கில் கொள்ளப்படும்,
- 270-280 நாட்கள் மகப்பேறு காலம், சிசு பருவம் 365 நாட்கள், குழந்தை பருவம் 365 நாட்கள் என்று கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
4. நடைமுறை
தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களில் கணக்கிடப்பட்டு 14 மாவட்டங்களில்
- நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு,
- ரத்தசோகை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள்
- உள்ள 23 வட்டாரங்களில் உள்ள 118 ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படுத்தப்படும்.
5. தவணை காலம்
குழந்தைகளுக்கு மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் ஊட்டச்சத்திற்காக கர்ப்பம் தரித்த உடன்
- முதல் தவணை (18-20-வது வாரம்) ரூ.1000
- இரண்டாம் தவணை (26-28-வது வாரம்) ரூ.1000,
- மூன்றாம் தவணை (37-38-வது வாரம்) ரூ.1000,
- 6-வது மாதம் 4-ம் தவணை ரூ.500,
- 12-வது மாதம் 5-ம் தவணை ரூ.500,
- 18-வது மாதம் 6-ம் தவணை ரூ.500,
- 24-வது மாதம் 7-ம் தவணை ரூ.500 என மொத்தமாக கர்ப்ப காலத்தில் ரூ.3 ஆயிரம்
- 2 வயது வரை குழந்தை வளரும் பருவத்தில் ரூ.2 ஆயிரம் என மொத்தமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.
- இந்த தொகை முதல் குழந்தைக்கு, இரண்டாவது குழந்தைக்கு வழங்கப்படுவது குறித்து கட்டுப்பாடு ஏதும் இல்லை.
6. இத்திட்டத்தின் நன்மைகள்
- இறப்பு விகிதம் குறைந்துள்ளது.
- கர்ப்பகால ரத்தசோகை தடுக்கப்படும்.
- பேறுகால குழந்தைகள் எடை சீரானதாக இருக்கும்.
- 2 வருடங்களுக்கான குழந்தைகள் வளர்ச்சி தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
Leave a Reply