CM’s Breakfast Scheme in Tamil Nadu | முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
தொடக்கம்:
- 15.09.2022 அன்று
- மதுரை மாநகரில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சிப் பள்ளியில் “முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம்” தொடங்கப்பட்டது.
நோக்கம்:
அரசு பள்ளிகளில் 01 முதல் 05ம் வகுப்பு வரை பயிலும் மாணக்கர்களுக்குக் காலை நேர உணவு வழங்கும் திட்டமாகும்.
திட்டத்தின் முக்கிய குறிக்கோள்:
- ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படும் பாதிப்பை தவிர்த்தல்.
- ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல்.
- பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல்.
- வேலைக்கு செல்லும் தாய்மார்களின் சுமையைக் குறைத்தல்.
இத்திட்டத்தின் நன்மைகள்:
- மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும்.
- மாணவர் வருகை அதிகரிக்கும்.
- பள்ளி இடைநின்றல் தவிற்க்கப்படும்.
- மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.
உணவுப் பட்டியல்:
- திங்கட்கிழமை – ரவா உப்புமாவுடன் காய்கறிச் சாம்பார்.
- செவ்வாய்க்கிழமை – சேமியா காய்கறி கிச்சடி.
- புதன்கிழமை – வெண் பொங்களுடன் காய்கறிச் சாம்பார்.
- வியாழக்கிழமை – அரிசி உப்புமாவுடன் காய்கறிச் சாம்பார்.
- வெள்ளிக்கிழமை – ரவா கேசரியுடன் சேமியா காய்கறிச் கிச்சடி
கண்காணிப்புக் குழு:
- மாநில, மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான கண்காணிப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டு இத்திட்டத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கப்படும்.
கண்காணிப்பில் ஈடுபடும் துறைகள்:
- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஊரக வளர்ச்சித் துறை
- நகராட்சி நிர்வாகத்துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்
- பள்ளிக் கல்வித்துறை ஆகிய துறைகளின் அலுவலர்களைக் கொண்டு கண்காணிக்கப்படும்.
சமீபத்திய மாணவர்களுக்கான தமிழக அரசின் பிற திட்டங்கள்
- இல்லம் தேடி கல்வி
- கல்வி புதுமைப்பெண் திட்டம்
- நான் முதல்வன் திட்டம்
Source & Thanks to : Tamilarasu
Leave a Reply