பசுமை தமிழ்நாடு இயக்கம்
தொடக்கம் :
- 24.09.2022, தமிழக முதல்வர் அவர்களால் தொடங்கப்பட்டது.
- இடம் – வண்டலூர், செங்கல்பட்டு மாவட்டம்.
- துறை. சுற்றுச்சுழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை.
நோக்கம் :
- தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவில் 23.8% மட்டுமே காடுகள் உள்ள நிலையை 33% சதவீதமாக உயர்த்துவதாகும்.
- வனங்களின் சுற்றுச்சூழல், சமூகத்திற்கு தூய காற்று, நீர் வளங்கள், வளமான மண், உயிர்ப்பன்மை, வாழ்வதற்கேற்ற சூழல் போன்றவற்றை வழங்குவதாலும்
- கரியமில வாயுவினை மறுசுழற்சி செய்து அதன் வெளிப்பாட்டினைக் கட்டுப்படுத்துதல், பருவநிலையை முறைப்படுத்துதல், இயற்கை சீற்றங்களை தணித்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய சூழலமைப்பு சேவைகளை வனங்கள் வழங்குவதால்
- இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வனச்சூழலை பாதுகாத்திட தமிழக அரசின் நவடிக்கையாகும்.
நடைமுறை திட்டம்.
- முதல் கட்டமாக 37 மாவட்டங்களில் உள்ள 360 நாற்றமங்கால்கள் மூலம் 2.80 கோடி மரக்கன்றுகள் வளர்கப்படும்.
- 2022 இல் மார்ச் மாதத்தில் மரக்கன்று வளர்ப்பு பணி தொடங்கப்பட்டு, செப்டம்பரில் நடவுப் பணிகள் தொடங்கப்பட்டது.
- ஐந்துவகை (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) நிலங்களின் மண் வளத்திற்கேப்ப மரக்கன்றுகள் வழங்கப்பட்டு, மரங்கள் வளர்க்கப்படும்.
- கண்காணிப்பு
- மாநில மற்றும் மாவட்ட பசுமை குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.
- நாற்றங்கால்/ மரம் வளர்ப்பு கண்காணிக்க பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் தனி வலைதளம் www.greentamilnadumission.com உருவாக்கப்பட்டுள்ளது.
மர வகை தேர்வின் முக்கியத்துவம்
- நாட்டு மர வகைகள் – காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும், இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளவும், அப்பேரிடர்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் திறன் கொண்டதாக திகழ்வதால் அதிக அளவிலான நாட்டு மரங்கள் நடுவது மற்றும் ஊக்குவிப்பது பசுமை தமிழ்நாடு இயக்கம் த்தின் முக்கிய குறிக்கோளாகும்.
- பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் உயர்நாக மரங்களான சந்தனம், செம்மரம் மற்றும் ஈட்டி மரம் போன்ற மரங்களை வளர்க்க விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள்.
- இயற்கை வளங்களை நிலையான முறையில் பயன்படுத்தி வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர், விவசாயிகள், கிராம மக்கள் போன்ற உள்ளூர் சமூகங்களின் வருமானத்தை பெருக்கவும் திட்டம் உதவும்.
மாநில பசுமை குழு மற்றும் மாவட்ட பசுமை குழுக்கள்
- குழுக்கள் நடவு மற்றும் மரம் வெட்டுதல் ஆகியவற்றை ஒழுங்கு படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
- மாவட்டம் பசுமை குழு அதிகாரம் கொண்டதாக விளங்கும்.
பசுமை தமிழ்நாடு இயக்கம் : பயன்கள்
- தமிழ்நாட்டில் ராம் சார் தளங்கள்
- ஈரநிலம் மேம்பாட்டு திட்டத்தில் பாதுகாக்கப்பட்ட 13 தளங்கள் சர்வதேச அமைப்பின் ராம்சார் அங்கீகாரம் பெற்றுள்ளன.
- இதன் மூலம் இந்தியாவில் உள்ள 75 தளங்களில் 14 தமிழ்நாட்டில் அமைந்து முதலிடம் பிடித்துள்ளது.
- 10 ஆண்டுகளில் காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவை 23.69 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக உயர்த்தப்படும்.
- சிறுவன மகசூல் மூலம் விவசாயிகள், பஞ்சாயத்துகள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்க வழிவகை செய்யும்.
- கரியமில வாயுவினை மறுசுழற்சி செய்து அதன் வெளிப்பாட்டினைக் கட்டுப்படுத்துதல், பருவநிலையை முறைப்படுத்துதல், இயற்கை சீற்றங்களை தணித்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய சூழலமைப்பு சேவைகளை வனங்கள் வழங்குவதால்
தமிழ்நாடு வனக்கொள்கை 2018
நோக்கங்கள் மற்றும் முக்கிய அம்சங்களாவன:
- வளத்தைப் பாதுகாத்தல்.
பல்வகை உயிரின தாவரத்தொகுதி மற்றும் அவற்றின் மரபியல் வளத்தைப் பாதுகாத்தல் - சீரமைத்தல்
வளங்குறைந்த வனப்பகுதிகளுக்கு புத்துயிர் அளித்து சீரமைத்தல். - கடலோரப்பகுதிகள்.
கடலோரப்பகுதிகளின் உயிரின் வாழ்க்கைச் சூழலின் அமைப்பு முறையைப் பாதுகாத்தல் மற்றும் மேலாண்மை செய்தல். - வனத்தின் அதிகரிப்பு
வனத்தின் உள்ளேயும் மற்றும் வெளியேயும், மரம் வளர்ப்பதை அதிகரிப்பதன் வாயிலாக காலநிலை மாற்றத்தால் ஏற்படுகிற தாக்கத்தைத் தணிப்பது மாற்றி அமைப்பது. - நீர் வளம் பெருக்குதல்.
வனப்பாதுகாப்பு மற்றும் நீர்வரத்து மேலாண்மை வாயிலாக நீர் வளத்தைப் பெருக்குதல். - வனவிலங்கு மேலாண்மையைப் பாதுகாத்துப் பேணுவதற்கு.
- அறிவியல் சார்ந்த வன மேலாண்மைக்கான ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு.
- வன மேலாண்மைக்கான மனித வளத்தை மேம்படுத்துதல் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தல்
நன்றி : https://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr240922_1665.pdf & https://www.forests.tn.gov.in/
Leave a Reply