Schemes : Tamilnadu Government Schemes
- புதுமைப் பெண் திட்டம்
- முதலமைச்சர் காலை உணவு திட்டம்
- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்
- இல்லம் தேடிக் கல்வி
- மக்களைத் தேடி மருத்துவம்
- ஒலிம்பிக் தேடல்
- நான் முதல்வன்
- உங்கள் தொகுதியில் முதலமைச்சர்
- முதல்வரின் முகவரி
- கள ஆய்வில் முதலமைச்சர்
1. நீங்கள் நலமா திட்டம்
- தொடக்கம் : 6 மார்ச் 2024
- இடம் : சென்னை
- நோக்கம் :
- அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் உரிய காலத்தில் பொதுமக்களுக்குச் சென்று செய்வதை உறுதி செய்ய இத்திட்டதின் நோக்கமாகும்.
- முதல்-அமைச்சர் உள்பட அனைத்து அமைச்சர்கள்,
- தலைமை செயலாளர், அனைத்து துறை செயலாளர்கள், துறை தலைவர்கள்,
- மாவட்ட கலெக்டர்கள் என அனைத்து அதிகாரிகளும் பொதுமக்களோடு, அவர்களின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு “நீங்கள் நலமா?” என்று கேட்டு,
- அரசின் நலத்திட்டங்கள், அரசால் நிறைவேற்றப்படும் சேவைகள் பற்றியும், அது வந்து சேர்கிறதா? என்பது குறித்தும் கருத்துகளை கேட்கப்போகிறார்கள்.
- அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் உரிய காலத்தில் பொதுமக்களுக்குச் சென்று செய்வதை உறுதி செய்ய இத்திட்டதின் நோக்கமாகும்.
- முக்கிய அம்சங்கள்
- இணையத்தளம் : https://neengalnalamaa.tn.gov.in/
- மக்கள் நல்வாழ்வுக்காக வகுக்கப்படும் திட்டங்களின் விவரங்களையும், பயன்பாடுகளையும், உரிமைகளையும் மக்களிடம் கொண்டுசேர்ப்பதற்காகத் தொடங்கப்பட்டிருக்கும் வலைதளம்.
- திட்டங்கள் தொடர்பான மக்களின் கருத்துகளை இத்தளத்தின் வாயிலாகக் கேட்டறிய முடியும்.
- இணையத்தளம் : https://neengalnalamaa.tn.gov.in/
- கலந்துரையாடல் சேவை
- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், அரசு உயர் அலுவலர்களும் காணொளி வாயிலாக மக்களுடன் உரையாடுவதற்கான வசதியும் இத்தளத்தில் உள்ளது.
- மக்கள் கருத்துக்களை பெரும் வசதி
- தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் குறித்து மக்கள் தங்களுடைய கருத்தினை ❛நீங்கள் நலமா❜ வலைதளம் வாயிலாகப் பதிவு செய்யும் வசதி இத்தளத்தில் உள்ளது.
Source : Neengal Nalama | நீங்கள் நலமா
2. மகளிர் உரிமைத் திட்டம்
தொடக்கம் : 15 செப்டம்பர் 2023
முக்கிய நோக்கங்கள்
- ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டது.
- குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது.
- அடுத்து, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது,
- பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி,
- வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி,
- சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதாகும்.
3. மகளிர் விடியல் பயணம்
தமிழ்ப் புதல்வன் திட்டம்
முக்கிய நோக்கங்கள்
- அரசு பள்ளி மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கவும்,
- உயர்கல்வி சேர்க்கையை உயர்த்தவும்,
- 6 முதல் 12-ம் வகுப்பு வரை, அரசு பள்ளிகளில் படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு, அவர்களின் வங்கிக் கணக்கில் மாதம் 1,000 ரூபாய் நேரடியாகச் செலுத்தப்படும்.
கனவு இல்லம் திட்டம் (அ) கலைஞர் வீடு வழங்கும் திட்டம்
அறிமுகம்
2010ம் ஆண்டு குடிசை இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கை எட்டும் வகையில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
முக்கிய நோக்கங்கள்
- குடிசை இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கை அடைதல்.
- 2030ம் ஆண்டுக்குள், தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
Leave a Reply