TNPSC Tamil Eligibility Paper Practice Set 1 (As per School Book)
1. உவமையைப் பயன்படுத்திச் சொற்றொடர் உருவாக்குக.
- தாமரை இலை நீர் போல
Answer:
என் நண்பன் தாமரை இலைநீர் போலப் பட்டும் படாமலும் பழகுவான். - மழைமுகம் காணாப் பயிர்போல
Answer:
தாயை காணாத குழந்தை மழை முகம் காணாப் பயிர்போல வாடினான். - கண்ணினைக் காக்கும் இமைபோல
Answer:
இறைவன் அனுதினமும் நம்மைக் கண்ணினைக் காக்கும் இமைபோலக் காத்துக் கொண்டு இருக்கிறார். - சிலை மேல் எழுத்து போல
Answer:
சிறுவயதில் கற்கும் அறக்கருத்துகள் சிலைமேல் எழுத்து போல் மனதிலே நிலைத்து நின்று நம் வாழ்வை வழி நடத்தும்.
2. மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக.
- மனக்கோட்டை:
படிக்காமலே தேர்வில் வெற்றிபெற்றுவிடலாம் என்று சில மாணவர்கள் மனக்கோட்டை கட்டுகிறார்கள். - கண்ணும் கருத்தும்:
கண்ணும் கருத்தாய் கவனமுடன் படித்தால் முதல் மதிப்பெண் பெறலாம். - அள்ளி இறைத்தல்:
பணத்தைக் கணக்குப் பார்க்காமல் அள்ளி இறைத்தால் விரைவில் வறுமைநிலை அடைவாய். - ஆறப்போடுதல்:
பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தாது ஆறப்போடுதல் அநேக தீயவிளைவுகளைத் தடுக்கும்.
3. சொற்களைப் பிரித்துப் பொருள் தருக.
- கானடை :
- கான் அடை = காட்டைச் சேர்
கான நடை = காட்டுக்கு நடத்தல்
கால் நடை = காலால் நடத்தல்
- கான் அடை = காட்டைச் சேர்
- வருந்தாமரை:
- வரும் தாமரை – தாமரை மலர்
வரும் தா மரை – தாவும் மான் வருகிறது.
வருந்தா மரை – துன்புறாத மான்
- வரும் தாமரை – தாமரை மலர்
- பிண்ணாக்கு :
- பிண்ணாக்கு – எள், கடலை ஆட்டும்போது கிடைப்பது.
பிள் நாக்கு – பிளவுபட்ட நாக்கு
- பிண்ணாக்கு – எள், கடலை ஆட்டும்போது கிடைப்பது.
- பலகையொலி :
- பலகை ஒலி – பலகையால் ஏற்படும் ஒலி
பல கை ஒலி – பல கைகள் தட்டும் ஒலி.
- பலகை ஒலி – பலகையால் ஏற்படும் ஒலி
Leave a Reply