தமிழக கல்வித்துறையில் மின்னணுத் தொழில்நுட்ப வளங்களின் பங்கு
கல்வியின் தரத்தை உறுதிசெய்யும் பொருட்டு தரமான பாடத்திட்டங்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பறை நிகழ்வுகளை வலுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் பள்ளிக்கல்வித் துறையினால் எடுக்கப்பட்டு வருகின்றன.
தற்கால அறிவுசார் மற்றும் தகவல் தொழில்நுட்பயுகம், கல்வி மேலாண்மையில் பல புதிய பார்வைகளை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கல்வித் துறையால் வழங்கப்பட்டுள்ளன. அவை
- 1. கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம் (Educational Management Information System -EMIS)
- 2. தமிழ்நாடு ஆசிரியர் தளம் (Tamil Nadu Teachers Platform -TNTP)
- 3. தீக் ஷா – இணையதளம் / செயலி (DIKSHA – National Digital Infrastructure for Teacher)
- 4. கல்வி தொலைக்காட்சி (Kalvi TV Channel No.200)
- 5. TN SCERT யூடியூப் (TN SCERT YouTube Channel)
- 6. திறனாய்வுத் தேர்வுகள் (Talent Search Examination)
- கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை (EMIS)
- தமிழ்நாடு ஆசிரியர் தளம் (TNTP)
- தீக் ஷா இணையதளம் / செயலி (DIKSHA)
- கல்வித் தொலைக்காட்சி (KALVI TV CHANNEL)
- TN SCERT யூ டியூப் சேனல் (TN SCERT YOUTUBE CHANNEL)
- வருகைப் பதிவுச் செயலி (Attendance App)
- திறனாய்வுத் தேர்வுகள் (Talent Search Examination)
- மின்னணு அடையாள அட்டை(Smart Card)
1. கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம் (Educational Management Information System -EMIS)
இத்திட்டத்தின் நோக்கம் மற்றும் பயன்கள்
- கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம் (EMIS) வழியாக தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள், மாணவர்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
- இத்தளத்தில் பதிவு செய்யும் விவரங்களைக் கொண்டு பள்ளி மாணவர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
- பல்வேறு துறைகளுக்கு இடையேயும், துறைகளுக்குள்ளும் அலுவலக ரீதியாக தொடர்பு கொள்ளவும்,
- பள்ளிகளிலுள்ள சிறந்த நடைமுறைகளைச் செயல் படுத்தவும்,
- இடைநின்ற குழந்தைகளைக் கண்காணிக்கவும் இத்திட்டம் பயன்படுகின்றது.
இத்தளத்தில் உள்ள விவரங்களை அடிப்படையில்
- அரசின் அனைத்து பள்ளிசார் பதிவேடுகளின் பதிவுகள் மற்றும் நடவடிக்கைகள்,
- மாணவர்களின் நலத்திட்டங்கள்,
- ஆசிரியர் பணியிடங்கள் வருவித்தல் மற்றும் உபரி பணியிடங்கள் கணக்கிடுதல் சார்ந்த அனைத்து விவரங்களும் தொகுக்கப் படுகிறது.
2. தமிழ்நாடு ஆசிரியர் தளம் (Tamil Nadu Teachers Platform -TNTP)
- ஆசிரியர்களுக்கான இணையதளம்.
- 1 முதல் 12 வகுப்பு புதிய பாடப் புத்தகங்கள், இதற்கான கற்றல்-கற்பித்தல் வளங்கள், இயங்குறு படங்கள், வினாத்தாள்கள், மதிப்பீட்டு வினாக்கள் மற்றும்
- ஆசிரியர்களுக்கான பயிற்சி கட்டகங்கள் போன்றவை மின்னணு வளங்களாக (Digital Resources) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
- இதற்கான இணையதளம் www.tntp.tnschools.gov.in
- பதிவேற்றம்
- மேலும் ஆசிரியர்கள் கற்றல்-கற்பித்தல் தொடர்பான மின்னணு வளங்களை (PPT, MP4, MP3, DOC, JPG, etc…) எந்த வடிவில் இருந்தாலும் அதனை TNTP இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.
- உள்நுழைமுறை
- இணையதளத்தில் உள்ள வளங்களைப் பயன்படுத்த www.tntp.tnschools.gov.in என்ற இணைய தளத்தில் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள Login ID மற்றும் Password பயன்படுத்தி உள்நுழையலாம்.
3. தீக் ஷா – இணையதளம் / செயலி (DIKSHA – National Digital Infrastructure for Teacher)
உருவாக்கம் மற்றும் நோக்கம்
- மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை சார்பில், மாநில வாரியாக பாடத்திட்டத்தை உள்ளீடு செய்யவும், அனைத்து மாநில மாணவர்கள், ஆசிரியர்கள் இந்தத் தரவுகளை பயன்படுத்திக்கொள்ளும் விதமாகவும் தீக் ஷா என்ற இணையதளம் / செயலி வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பயன்கள்
- இதன் உதவியால் ஆசிரியர்கள், அனைத்து வகுப்பிற்கான பாடங்கள், பாடங்கள் தொடர்பான செய்முறைப் பயிற்சிகள், வீடியோ படங்கள் ஆகியவற்றை தரவிறக்கம் செய்யலாம்.
- மேலும், புதிய பாடப்புத்தகத்தில் உள்ள QR கோடுகளை ஸ்கேன் செய்தால், பாடத்திட்டம் தொடர்பான வீடியோ, ஆடியோ தரவுகள் திரையில் தோன்றும்.
- இதனால் ஆசிரியர்கள் மட்டுமில்லாமல் பெற்றோரும் பாடத்திட்ட கருத்துக்களைத் தெரிந்துக்கொள்ள முடியும்.
4. கல்வி தொலைக்காட்சி (Kalvi TV Channel No.200)
நோக்கம்
- பள்ளி மாணவர்களிடம் கற்றலை மேம்படுத்தவும், தகவல்களை எளிதில் கொண்டு சேர்க்கும் விதமாகவும் கல்வித் தொலைக்காட்சி என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி சேனல் தொடங்கப்பட்டுள்ளது.
- கல்வித் தொலைக்காட்சி சேனலில் 24 மணி நேரமும் கல்வி தொடர்பான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.
- கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் முறை, நுழைவுத்தேர்வு குறித்த விவரங்கள், புதிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர்களின் நேர்காணல், மாணவர்களின் அரிய கண்டுபிடிப்புகள்,
- கல்வியாளர்களின் கலந்துரையாடல்கள் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிகழ்ச்சிகள் நாள் முழுவதும் ஒளிபரப்பப்படும்.
- அரசு கேபிள் டிவியில் 200 ம் எண் சேனலில் கல்வித் தொலைக்காட்சி இடம் பெற்றுள்ளது.
5. TN SCERT யூடியூப் (TN SCERT YouTube Channel)
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் TN SCERT YouTube Channel ல் பள்ளிகளில் மிகச் சிறப்பாகக் கற்பிக்கும் ஆசிரியர்களது புதுமைகளை காணொலிக் காட்சிகளாகப் பதிவேற்றம் செய்துள்ளது.
6. திறனாய்வுத் தேர்வுகள் (Talent Search Examination)
- பள்ளி மாணவர்களுக்கு கல்வியில் உதவும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கல்வி உதவித்தொகைகளை வழங்குகின்றன.
- மாணவர்களின் பொருளாதார மற்றும் சமூகநிலையைக் கருத்தில்கொண்டும், தகுதி அடிப்படையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
பள்ளி மாணவர்கள் உதவித்தொகை பெறுவதற்காக 3 வகையான திறனாய்வுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
- தேசியத் திறனாய்வுத் தேர்வு (NTSE – National Talent Search Examination)
- தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித்தொகை திட்டம் (NMMS –National Means cum Merit Scholarship Scheme)
- தமிழக ஊரக மாணவரின் திறனாய்வுத் தேர்வு (TRUST – Tamilnadu Rural Students Talent Search Examination)
இத்தேர்வுகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்று பயன்பெற்று வருகின்றனர்.
Leave a Reply